Wednesday, July 22, 2009
இத நினைச்சு நான் வேதனை படல வெட்க்கப்படல வருத்தப்படல நான் ஊருக்கு போய்ட்டு வரேண்டா கண்ணா
கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் மதம் மாறனும் . இந்த கடவுள் செய்யாததையா இன்னொரு கடவுள் செய்ய போறாரு . இறைவன் ஒருவனேனு எல்லா மதமும் சொல்லுது . எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று எல்லா மதத்திலும் உள்ள கடவுள் சொல்றாங்க . அப்புறம் எதுக்குய்யா அடிச்சிகிறிங்க ? என்னைக்காவது சிவனும் அல்லாவும் சண்டை போட்டதா வரலாறு இருக்கா இல்ல இயேசுவும் விநாயகரும் போர் புரிந்ததா வரலாறு இருக்கா . கேட்டா பக்தின்னு சொல்றிங்க. சரி பக்தி என்று வைத்து கொண்டாலும் நீ கோவிலுக்கு போறவனா இருந்து உன்னை சர்ச்சுக்கு அழைத்து சென்றால் கோவில்ல சாமி கும்பிட்ட அதே பக்தியோட தான் நீ இயேசு நாதர கும்பிடுரியா ? அதுவும் கிடையாது. கும்பிடுற மனிதன் தான் இப்படினா அங்க கோவில் மற்றும் சர்ச்சு மற்றும் மசூதி ல இருக்கிற அரங்கால்வலர் குழு இதுக்கு எல்லாம் ஒரு படி மேல போய். வேற்று மதத்தவரை உள்ள விடுறது இல்ல . இதுக்கு பேரு தான் எல்லா உயிரிடமும் அன்பு காட்டறதா......................( ஒ இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி விழுறதா ) இத தான் உங்க சாமி செய்ய சொல்லி கொடுத்தாரா. தோஷம் ஆகிடுமாம் புனிதம் கெட்டுவிடுமாம் சாமி குத்தம் ஆகிவிடுமாம். உங்க கடவுள் பக்திய நினைச்சா சிரிப்பு தான்யா வருது . இத சொன்னா என்னை நாத்திகன்னு சொல்றிங்க. மதத்தை காப்பாத்தனும் என்று நினைக்கிற ஆத்திகன்னா இருக்கிறத விட மனிதநேயம் வளரனும் நினைக்கிற நாத்திகனா இருக்கிறதுல பெரும படுறேன்ய்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment