Sunday, July 19, 2009
காகா
பல தொழிற் சங்கங்கள் மற்றும் பல மக்கள் நல இயக்கங்கள் நம் நகரின் நலம் காப்பதற்காக என்று கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து பந்த் நடத்த அனுமதிபெற்று சிறப்பான முறையில் நகரின் மத்தியில் மேடை போட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு சேவை செய்ய தான் அரசு மற்றும் அரசியல் வாதிகள் அரசு எந்திரமும் அரசியல் வாதிகளும் அவர்களுடைய கடமையை செய்ய தவறியாதால் தான் இந்த அவலம் என்று மேடையேறி பேசும் அன்பரே. நீர் ஓட்டு போட்டு தேர்தெடுத்த அரசியல் வாதி வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் இல்லை சட்ட சபையில் தான் என்னத்தை கிழித்தார் என்று யோசித்தாயா இனிமேலாவது ஓட்டு போடுவதற்கு முன் யோசி . நமக்காக நல்லது செய்யும் ஒருவரை தேர்தெடுத்து அவரை சட்ட சபைக்கு அனுப்பு கடமையை செய்ய தவறினால் பகிரங்கமாக ராஜினாமா கொடுக்க வேண்டும் இல்லை பகிரங்கமாக கொடுக்க வைப்போம் என்று சொல்லி ஒரு நபரை தேர்தலில் நிர்க்கச்செய். ஜாதியை துக்கி ஏறி மதத்தை தூக்கில் போடு ஒற்றுமை ஒன்று மட்டுமே இனி நாம் வாழ்வதற்கான ஆதாரம். நாலு பேர் சேர்ந்தது நடத்திட்டா அந்த போராட்டம் வென்றிடுமா. நாலுபேர் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்று பார்க்க வேண்டும். நகரின் நலம் காக்க மக்கள் எதுக்குய்யா உண்ணாவிரதம் இருக்கணும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment