Wednesday, July 22, 2009

இத நினைச்சு நான் வேதனை படல வெட்க்கப்படல வருத்தப்படல நான் ஊருக்கு போய்ட்டு வரேண்டா கண்ணா

கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் மதம் மாறனும் . இந்த கடவுள் செய்யாததையா இன்னொரு கடவுள் செய்ய போறாரு . இறைவன் ஒருவனேனு எல்லா மதமும் சொல்லுது . எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று எல்லா மதத்திலும் உள்ள கடவுள் சொல்றாங்க . அப்புறம் எதுக்குய்யா அடிச்சிகிறிங்க ? என்னைக்காவது சிவனும் அல்லாவும் சண்டை போட்டதா வரலாறு இருக்கா இல்ல இயேசுவும் விநாயகரும் போர் புரிந்ததா வரலாறு இருக்கா . கேட்டா பக்தின்னு சொல்றிங்க. சரி பக்தி என்று வைத்து கொண்டாலும் நீ கோவிலுக்கு போறவனா இருந்து உன்னை சர்ச்சுக்கு அழைத்து சென்றால் கோவில்ல சாமி கும்பிட்ட அதே பக்தியோட தான் நீ இயேசு நாதர கும்பிடுரியா ? அதுவும் கிடையாது. கும்பிடுற மனிதன் தான் இப்படினா அங்க கோவில் மற்றும் சர்ச்சு மற்றும் மசூதி ல இருக்கிற அரங்கால்வலர் குழு இதுக்கு எல்லாம் ஒரு படி மேல போய். வேற்று மதத்தவரை உள்ள விடுறது இல்ல . இதுக்கு பேரு தான் எல்லா உயிரிடமும் அன்பு காட்டறதா......................( ஒ இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி விழுறதா ) இத தான் உங்க சாமி செய்ய சொல்லி கொடுத்தாரா. தோஷம் ஆகிடுமாம் புனிதம் கெட்டுவிடுமாம் சாமி குத்தம் ஆகிவிடுமாம். உங்க கடவுள் பக்திய நினைச்சா சிரிப்பு தான்யா வருது . இத சொன்னா என்னை நாத்திகன்னு சொல்றிங்க. மதத்தை காப்பாத்தனும் என்று நினைக்கிற ஆத்திகன்னா இருக்கிறத விட மனிதநேயம் வளரனும் நினைக்கிற நாத்திகனா இருக்கிறதுல பெரும படுறேன்ய்யா

Sunday, July 19, 2009

காகா

பல தொழிற் சங்கங்கள் மற்றும் பல மக்கள் நல இயக்கங்கள் நம் நகரின் நலம் காப்பதற்காக என்று கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து பந்த் நடத்த அனுமதிபெற்று சிறப்பான முறையில் நகரின் மத்தியில் மேடை போட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு சேவை செய்ய தான் அரசு மற்றும் அரசியல் வாதிகள் அரசு எந்திரமும் அரசியல் வாதிகளும் அவர்களுடைய கடமையை செய்ய தவறியாதால் தான் இந்த அவலம் என்று மேடையேறி பேசும் அன்பரே. நீர் ஓட்டு போட்டு தேர்தெடுத்த அரசியல் வாதி வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் இல்லை சட்ட சபையில் தான் என்னத்தை கிழித்தார் என்று யோசித்தாயா இனிமேலாவது ஓட்டு போடுவதற்கு முன் யோசி . நமக்காக நல்லது செய்யும் ஒருவரை தேர்தெடுத்து அவரை சட்ட சபைக்கு அனுப்பு கடமையை செய்ய தவறினால் பகிரங்கமாக ராஜினாமா கொடுக்க வேண்டும் இல்லை பகிரங்கமாக கொடுக்க வைப்போம் என்று சொல்லி ஒரு நபரை தேர்தலில் நிர்க்கச்செய். ஜாதியை துக்கி ஏறி மதத்தை தூக்கில் போடு ஒற்றுமை ஒன்று மட்டுமே இனி நாம் வாழ்வதற்கான ஆதாரம். நாலு பேர் சேர்ந்தது நடத்திட்டா அந்த போராட்டம் வென்றிடுமா. நாலுபேர் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்று பார்க்க வேண்டும். நகரின் நலம் காக்க மக்கள் எதுக்குய்யா உண்ணாவிரதம் இருக்கணும்.

Wednesday, July 15, 2009

சிரிப்பு வருது

அமைச்சர் வருக்கிறார் என்று காலையில் இருந்து மக்கள் பயன்படுத்தும் பொதுவான சாலையில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் ஓட்டு போட்ட அனைவரும் 2கி.மீ . சுற்றி பிழைப்பை தேடி ஓடி கொண்டிருக்கிறார்கள். சேவை செய்வதயே வாழ்வின் லட்சியமாகவும், சேவை செய்வதே உயிர் மூச்சாகவும், சேவை செய்வதற்கே தன வாழ்வை அர்ப்பணித்த,சேவை செய்வதற்கே பிறந்த நம் கதர் சட்டை அரசியல்வாதி கலந்து கொள்ள குளிர் சாதன வசதி கொண்ட வாகனத்தில் வருகிறார் தன ஆட்சி காலத்தில் அவர் புரிந்த சாதனை பற்றி பேசுவதற்கு. கொளுத்தும் வெயிலில் காத்துக்கொண்டிருக்கிறான் ஓட்டு போட்ட மாட்டு வண்டிக்காரன் எப்பையா பாதைய விடுவீங்க !!!!!!!!!!