skip to main
|
skip to sidebar
விதையிடுவோம்
அன்புக்கு விதையிடுவோம் மனித நேயத்தை வளர்ப்போம் பண்புக்கு விதையிடுவோம் ஒற்றுமையை வளர்ப்போம்
Saturday, June 26, 2010
என்னையா நடக்குது இங்க
அரசாங்கம் உதவி திட்டம், நலத்திட்டம் என்று எத்தனையோ திட்டம் போட்டாலும் அதை செயல் படுத்துற அதிகாரிகள் தனக்கு சாதகமாகவும் தனக்கு தெரிந்தவனுக்கும் தனக்கு (வாங்குற பணத்தில்) பாதி தருகிரவனா பார்த்து உதவி தொகை திட்டத்தை நிறைவேத்துறாங்க. அதை பொய் கணக்கு எழுதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறாங்க. அரசியல் வாதிகளும் மேடைக்கு மேடை நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்று தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். நலத்திட்டம் மக்களை சென்றடையவில்லை என்று யாரவது சொன்னால் அதிகாரிகள் எழுதி கொடுத்த பொய்கணக்கு தான் இங்கு மிகப்பெரிய சாட்சி. இல்லை என்று யாரவது வழக்கு தொடுத்தல் சாட்சிகள் அனைத்தும் தெளிவாக அரசுக்கு சாதகமாக இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்னு நீதிபதி ஐயா சொல்லுவாரு. சாட்சிகள் அனைத்தும் பொய்னு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் ஏன் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கும் தெரியும். இருந்தாலும் நாம எல்லோரும் மறுபடியும் மறுபடியும் அவுங்களுக்கே ஓட்டு போடுறோம். இப்ப தப்பு யார்கிட்ட இருக்கு அரசியல்வாதியிடமா இல்ல சட்டத்திடமா இல்ல நம்மிடமா . இந்த மாதிரி எழுதுறான்னு என்ன ஏதோ ஒரு குட்டி கட்சியில் இருக்கிற அல்லது எதாவது இயக்கத்தில் இருகிரவன்னு கேவலமா நினைச்சுடாதிங்க. நான் சாதாரன இந்தியகுடிமகன். கேவலமானு நான் எழுதியதற்காக எதாவது இயக்கத்தில் உள்ளவுங்க இத படிக்கும் போது கொஞ்சம் கோபம் வரும் பதிலுக்கு கட்சி மூலம் ஒன்று பட்டால்தான் தட்டி கேட்ட்கமுடியும்னு நீங்க சொல்லனும்னு நினைபிங்க ஒற்றுமை பத்தி என்னிடம் பதில் சொல்ல நேரலாம். ஆனா என்ன பொறுத்தவரை ஒற்றுமை என்பது நாலு பேரு சேர்த்து இருப்பது கிடையாது . நான்கு மனங்கள் சேர்த்து இருப்பது. எனக்கு வந்த கோபம் உனக்கு வந்தாலே போதும் இங்க யாரும் யாரையும் ஏமாத்த முடியாது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
▼
2010
(10)
▼
June
(10)
நியாயமா ?
புது மொழி
என்னையா நடக்குது இங்க
வடிவேலு முதல் தேர்தல் வரை
கையெழுத்து இயக்கம்
தேர்தல்
பத்திரிக்கை நண்பர்களுக்கு சில சில கேள்வி
சந்தேகம்
தினம் ஒரு போராட்டம்
நியாயமா ?
►
2009
(4)
►
August
(1)
►
July
(3)
No comments:
Post a Comment