Saturday, June 26, 2010

நியாயமா ?

வெளி நாட்டு காரனுங்க வெளிநாட்டு காரனுங்க தான் எத்தனை தடவை சொல்லி இருப்போம்.ஆனா என்னைக்காவது இத யோசித்தது பார்த்திருப்போமா அருங்காட்சியக சுவரில் பேர் எழுதுறது, யாரும் பார்க்காத நேரம் எச்சி துப்புறது சாலை விதிகளை கடைப்பிடித்து என்னைக்காவது டிராபிக் சிக்னலுக்கு மரியாதை கொடுத்திருப்போமா ? கிடையாது. திரையரங்கில் காலை முன் சீட்டில் போடாம படம் பார்ப்போமா ? கிடையாது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் என்னைக்காவது எதையாவது பொறுமையா வரிசையில நின்னு வாங்கியிருப்போமா? கிடையாது. இத எல்லாம் என்னைக்கு நிறுத்துறோமோ அன்னிக்கு தான் வெளிநாடு மாதிரி நம்ம நாடும் சுத்தமா இருக்கும். தப்ப நம்ம மேல வச்சிட்டு நாட்ட தப்பு சொன்னா நியாயமா நண்பா

நியாயமா நண்

புது மொழி

மனித நேயம் என்றால் இயன்றதை கொடுப்பேன் . மதம் என்றால் இயன்றாலும் கொடுக்கமாட்டேன்.

என்னையா நடக்குது இங்க

அரசாங்கம் உதவி திட்டம், நலத்திட்டம் என்று எத்தனையோ திட்டம் போட்டாலும் அதை செயல் படுத்துற அதிகாரிகள் தனக்கு சாதகமாகவும் தனக்கு தெரிந்தவனுக்கும் தனக்கு (வாங்குற பணத்தில்) பாதி தருகிரவனா பார்த்து உதவி தொகை திட்டத்தை நிறைவேத்துறாங்க. அதை பொய் கணக்கு எழுதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறாங்க. அரசியல் வாதிகளும் மேடைக்கு மேடை நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்று தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். நலத்திட்டம் மக்களை சென்றடையவில்லை என்று யாரவது சொன்னால் அதிகாரிகள் எழுதி கொடுத்த பொய்கணக்கு தான் இங்கு மிகப்பெரிய சாட்சி. இல்லை என்று யாரவது வழக்கு தொடுத்தல் சாட்சிகள் அனைத்தும் தெளிவாக அரசுக்கு சாதகமாக இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்னு நீதிபதி ஐயா சொல்லுவாரு. சாட்சிகள் அனைத்தும் பொய்னு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் ஏன் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கும் தெரியும். இருந்தாலும் நாம எல்லோரும் மறுபடியும் மறுபடியும் அவுங்களுக்கே ஓட்டு போடுறோம். இப்ப தப்பு யார்கிட்ட இருக்கு அரசியல்வாதியிடமா இல்ல சட்டத்திடமா இல்ல நம்மிடமா . இந்த மாதிரி எழுதுறான்னு என்ன ஏதோ ஒரு குட்டி கட்சியில் இருக்கிற அல்லது எதாவது இயக்கத்தில் இருகிரவன்னு கேவலமா நினைச்சுடாதிங்க. நான் சாதாரன இந்தியகுடிமகன். கேவலமானு நான் எழுதியதற்காக எதாவது இயக்கத்தில் உள்ளவுங்க இத படிக்கும் போது கொஞ்சம் கோபம் வரும் பதிலுக்கு கட்சி மூலம் ஒன்று பட்டால்தான் தட்டி கேட்ட்கமுடியும்னு நீங்க சொல்லனும்னு நினைபிங்க ஒற்றுமை பத்தி என்னிடம் பதில் சொல்ல நேரலாம். ஆனா என்ன பொறுத்தவரை ஒற்றுமை என்பது நாலு பேரு சேர்த்து இருப்பது கிடையாது . நான்கு மனங்கள் சேர்த்து இருப்பது. எனக்கு வந்த கோபம் உனக்கு வந்தாலே போதும் இங்க யாரும் யாரையும் ஏமாத்த முடியாது

வடிவேலு முதல் தேர்தல் வரை

நம்ம எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும் எவ்வளவுதான் அராஜகம் பண்ணினாலும் மறுபடியும் மறுபடியும் இந்த மக்கள் நமக்கே ஓட்டு போடுராய்ங்கலே ரொம்ப நல்லவயிங்கட

ஏன்டா
இன்னுமாடா இந்த ஊர் காரய்ங்க நம்மல நம்புராய்ங்க

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம் என்கிற பெயரில் பலரிடம் கையெழுத்து வாங்கி அதை என்ன செய்கிறார்கள். யாரிடம் அதை கொடுக்கிறார்கள். அதை வாங்கியவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா ? கையெழுத்து இயக்கம் எங்காவது வெற்றி பெற்று இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்

தேர்தல்

தேர்தல் இன்று வணிகம் ஆகிவிட்டது இது எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் இருந்தும் இது பற்றி அரசு எவ்விதமான நடவடிக்கைகளுக்கும் எடுக்கவில்லை இதை ஒரு தனி மனிதனாகவோ அல்லது ஒரு குழுவாக இருந்து எதிர்த்து கேள்விகேட்க நம்மால் முடயுமா என்றால் முடியாது......(முடியும் என்றால் கேட்டு பாருங்கள் முடிந்தால் உங்கள் அனுபவங்களை கூறுங்கள் ) தனி நபர் என்றால் எப்ப எது நடக்கும் என்று தெரியாது குழுவாக என்றால் அடுத்த தேர்தலில் அந்த குழு தடை செய்ய பட்ட குழுவாகிவிடும். இதுக்கு பேர் தான் ஜனநாயகமா

பத்திரிக்கை நண்பர்களுக்கு சில சில கேள்வி

பத்திரிகை சுதந்திரம் என்றால் என்ன .........?

2.நடு நிலை தவறாத பத்திரிகை ஏதாவது வெளி வருகிறதா .........?
3.அரசியல் தலைவர்கள் தவறு செய்தால் தைரியமாக தவறை உங்கள் பத்திரிக்கையில் உங்களால் எழுத முடியுமா .....

சந்தேகம்

லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ...........

தினம் ஒரு போராட்டம்

உண்ணாவிரதம் போராட்டம்
கருப்பு துணி கட்டி போராட்டம்
மனித சங்கிலி
சாலை மறியல்
ரயில் மறியல்
பிட்சை எடுக்கும் போராட்டம்
பேருந்து மறியல்
மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்
ஊர்வலம்
முற்றுகை போராட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட போராட்டங்களை தினமும் ஏதோ ஒரு கட்சி அல்லது மாணவர்கள் அல்லது அரசு ஊழியர்கள் அல்லது தனியார் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்

இந்த போராட்டங்களின் முடிவு இதுவரை யாருக்குமே தெரியாத புதிர் இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறனர் என்பது பற்றி யாருக்கும் எவ்வித கவலையும் இல்லை (அரசு அதை பற்றி துளியும் அக்கறை காட்டுவதில்லை) பெயருக்கு போராட்டம் நடத்துவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர் .மக்களும் வேடிக்கை தான் பார்க்கின்றனர். காசுக்கு ஓட்டு போட்டால் வேறு என்ன செய்ய முடியும் வேடிக்கை தான் பார்க்க வேண்டும்

நியாயமா ?

வெளி நாட்டு காரனுங்க வெளிநாட்டு காரனுங்க தான் எத்தனை தடவை சொல்லி இருப்போம்.ஆனா என்னைக்காவது இத யோசித்தது பார்த்திருப்போமா அருங்காட்சியக சுவரில் பேர் எழுதுறது, யாரும் பார்க்காத நேரம் எச்சி துப்புறது சாலை விதிகளை கடைப்பிடித்து என்னைக்காவது டிராபிக் சிக்னலுக்கு மரியாதை கொடுத்திருப்போமா ? கிடையாது. திரையரங்கில் காலை முன் சீட்டில் போடாம படம் பார்ப்போமா ? கிடையாது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் என்னைக்காவது எதையாவது பொறுமையா வரிசையில நின்னு வாங்கியிருப்போமா? கிடையாது. இத எல்லாம் என்னைக்கு நிறுத்துறோமோ அன்னிக்கு தான் வெளிநாடு மாதிரி நம்ம நாடும் சுத்தமா இருக்கும். தப்ப நம்ம மேல வச்சிட்டு நாட்ட தப்பு சொன்னா நியாயமா நண்பா